Saturday, May 9, 2009

INKJET PRINTER - ஐ அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்..? அடிக்க‌டி CATRIDGE மாற்ற‌ வேண்டி உள்ள‌தா..?

உங்களுடைய INKJET PRINTER ல் இருந்து எவ்வளவு மை வெளியேற வேண்டுமென்பதை நீங்களே முடிவு செய்யலாம். இதற்கு INKSAVER என்ற மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுவிக் கொள்வதன் மூலம் INKJET PRINTER ல் இருந்து எத்தனை விழுக்காடு மை வெளியேறி பேப்பரில் அச்சிடப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். இதன் மூலம் கூடுதலான‌ பக்கங்களை அச்சிட முடியும், பணத்தையும் சேமிக்க முடியும்.



இதற்கான இணையதள தொடர்பை கீழே கொடுத்துள்ளேன். அந்த இணையதள தொடர்பில் அமுக்கி கோப்பை சேமித்துக் கொள்ளவும். சேமித்த பிறகு அதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். இப்பொழுது INKSAVER ICON வலதுபுற கீழ் ஓரத்திலிருக்கும் (TASKBAR). அதனை DOUBLE CLICK செய்து மையின் அளவை நிர்ணயம் செய்து கொள்ளவும்.



கீழே கொடுத்துள்ள இணையதள தொடர்பு துண்டிக்க பட்டால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிய படுத்தவும்.


INKSAVER :

download link

பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டமிடவும்.


மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....

2 comments:

  1. இது அந்த பிரிண்டர் மென்பொருளை Over ride செய்யுமா? ஏனென்றால் எவ்வளவு விழுக்காடு என்பதை நாம் எப்படி முடிவு செய்யமுடியும்?

    ReplyDelete
  2. இந்த மென்பொருள் பிரிண்டர் மென்பொருளை ஓவர் ரைட் பண்ணாது. இதனுடைய Control டாஸ்க்பாரில் தனியாக வந்துவிடும். தேவை இல்லை என்றால் எளிதாக நீக்கி விட முடியும். தைரியமாக பயன்படுத்துங்கள்...

    பின்னூட்டத்திற்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே...

    ReplyDelete